மத்திய MSME அமைச்சகத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவுபெற்ற நமது 'சிறப்பு ழ'கர அரங்கம், உலகளாவிய தமிழ் நெஞ்சங்களையும், இளம் படைப்பாளர்களையும், ஆய்வு அறிஞர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு உன்னத இலக்கியப் பேரியக்கமாகும்.
தமிழ் மொழியின் தொன்மையைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நவீன காலத்திற்கு ஏற்ப இணையம் வழியாகத் தமிழ் இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வதே நமது முதன்மை நோக்கம். இங்கு கவிதை, நாவல், கட்டுரை போன்ற பல்வேறு தளங்களில் மெகா ரியாலிட்டி போட்டிகள் (கவிதை பிக் பாஸ்) உலகத்தரம் வாய்ந்த முறையில் நடத்தப்படுகின்றன.
மேலும், வெறும் போட்டிகளோடு நின்றுவிடாமல், வளரும் தலைமுறைக்குத் தமிழ் இலக்கண, இலக்கியப் பயிற்சிகள்/ ஆராய்ச்சி மற்றும் முற்றிலும் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள் மூலமாகப் புதிய தமிழ் ஆளுமைகளை உருவாக்கி, அவர்களை உலக அரங்கில் அடையாளம் காட்டும் உன்னதப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.