நிறுவனர் மற்றும் தலைவர் உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! உலகளாவிய இலக்கிய ஆளுமைகளே!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயரிய தத்துவத்தின்படி, உலகெங்கும் பரவி வாழும் தமிழ் நெஞ்சங்களையும், இளம் படைப்பாளர்களையும், ஆய்வாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் உன்னதப் பாலமாகத் திகழ்கிறது நமது சிறப்பு 'ழ'கர அரங்கம்.
வெறும் போட்டிகளை நடத்தும் தளமாக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் தொன்மையையும் இலக்கியச் செழுமையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு அறிவுக்களமாக இந்த அமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.
கவிதை, நாவல், கட்டுரை போன்ற படைப்பிலக்கியப் போட்டிகள் மட்டுமன்றி, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள்/பயிற்சிகள் மற்றும் இலவச ஆன்லைன வகுப்புகள் மூலமாகப் புதிய தமிழ் ஆளுமைகளை உருவாக்குவதே நமது முதன்மை நோக்கம்.
நமது அரங்கத்தின் தாரக மந்திரம்: "தூய தமிழ் வளர்ப்போம்; புதிய திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டுவோம்!"
வாரீர்... தமிழ் நெஞ்சங்களால் ஆளப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கியப் பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இணையுங்கள்!
நன்றிகளுடன்,
நிறுவனர் மற்றும் தலைவர்,
சிறப்பு 'ழ'கர அரங்கம்
நிறுவனர் மற்றும் தலைவர் உரை
சிறப்பு 'ழ'கர அரங்கம்